கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதிலிருந்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அதே போல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கூட அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதால் தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது என அடிக்கடி பேசி வருகிறார்.
இந்நிலையில் நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம் என கமல் கூறினார். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என கூறினார்.
ரஜினி - கமல் இணைப்பு குறித்து அரசியல் பிரமுகர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்ததாவது, முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் என இந்த மொட்டை சொல்றேன் கேட்டுக்கோங்க என பதில் அளித்துள்ளார்.