இதையடுத்து சினிமாவைச் சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது சம்பளங்களில் இருந்து ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதாக அறிக்கை விட்டனர். அந்த வகையில் விஜய் ஆண்டனி, இயக்குனர் ஹரி, நடிகர் ஹரீஷ் கல்யாண் போன்றோர் வெளிப்படையாகக் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக கூறினர்.
இந்நிலையில் தற்ப்போது கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தில் இருந்து 20 முதல் 30 சதவீதம் குறைத்துக்கொண்டுள்ளார், இது குறித்து கூறியுள்ள அவர், நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என எனது தந்தை தயாரிப்பாளர் என்ற முறையில் கருத்து தெரிவித்தார். ஒரு நடிகையாக இதை நான் வரவேற்கிறேன். மேலும், சினிமாவில் உள்ள அனைவரும் இதை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.