நான் மதிக்கும் மரியாதைக்குரியவர் அவர்! பிரபல நடிகரை பாராட்டிய கீர்த்தி ஷெட்டி

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (21:57 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி ஷெட்டி நடிகை சூர்யாவை பாராட்டியுள்ளளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. இவ்ர் நடிப்பில், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான உப்பென்னா படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி  நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் ஆகிய படங்களில் நடித்து     கீர்த்தி ஷெட்டிக்கு ரசிகர்களைக் கவர்ந்தார்.

தற்போது, முன்னணி இயக்குனர் பாலா இயக்கத்தில்,சூர்யா தயாரித்து நடித்து வரும் வணங்கான் என்ற படத்தில் வித்தியாசமான ரோலில் நடிக்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, தன் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார். அப்போது, ஒருவர் சூர்யாவைப் பற்றிக் கேட்டதற்கு, நான் மதிக்கும் மரியாதைக்குரியவர் சூர்யா என்று குறிப்பிட்டடுள்ளார். இது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கவுள்ள நாக சைதயன்யா ஹீரோவாக நடிக்கும் படத்தில் கீர்த்தி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்