தளபதி 66 படத்தில் கண்டிப்பாக கீர்த்தி சுரேஷ் இருப்பார்… ஏன் தெரியுமா?

சனி, 2 அக்டோபர் 2021 (14:56 IST)
தளபதி 66 படம் உருவாவதற்கே முக்கியக் காரணமாக இருந்தவர் கீர்த்தி சுரேஷ் தான் என்று சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

விஜய்யை வைத்து எவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கும் தமிழ் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும், எப்படி தெலுங்கு தயாரிப்பாளருக்கு விஜய் தேதிகள் கொடுத்தார் என்பது ஆச்சர்யமாகவே இருந்தது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மூலமாகதான் தில் ராஜு விஜய்யிடம் சிபாரிசுக்கு சென்று இந்த படத்தை பெற்றாராம். அதனால் கண்டிப்பாக இந்த படத்தில் அவர் ஒரு முக்கியமான வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்