ரிலீஸ் தேதியை இறுதி செய்த கவினின் ஸ்டார் படக்குழு…!

vinoth

திங்கள், 8 ஏப்ரல் 2024 (07:35 IST)
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்டார் படத்தை டாடா கவின் நடிப்பில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் இளன்.

இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் நிறைவுற்றது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து விண்டேஜ் லவ் என்ற பாடல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் 10 அல்லது 17 ஆகிய தேதிகளில் ஒன்றில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.  மே மாதத்தில் ரிலிஸ் ஆகும் என எதிர்பார்த்த இந்தியன் 2 மற்றும் ராயன் ஆகிய திரைப்படங்கள் ஜூன் மாதத்துக்கு சென்றதால் ஸ்டார் திரைப்படம் மே மாதமே ரிலீஸ் ஆகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்