46 நாட்களில் ஒரு படத்தையே முடித்துவிட்ட கவின் படக்குழு.. ரிலீசுக்கு தயாராக 3 படங்கள்..!

Siva

வியாழன், 14 மார்ச் 2024 (19:06 IST)
கவின் நடித்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு வெறும் 46 நாட்களில் முடிந்து விட்டதாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவின் நடிப்பில் நெல்சன் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் சிவபாலன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பெரும் 46 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் அடுத்த வாரம் முதல் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

ஏற்கனவே கவின் நடித்த ஸ்டார் என்ற படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகி வருகிறது என்பதும் சமீபத்தில் தான் கவின் நடித்த ’கிஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தகவல் வெளியானது

இதனை அடுத்து கவின் நடித்த மூன்று படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தடுத்து ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக அடுத்த மாதம் முதல் செல்ல இருப்பதாக கூறப்படுவதை அடுத்து இந்த ஆண்டு அவர் நான்கு படங்களை ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்