விஷால்-கார்த்தியின் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படப்பிடிப்பு தொடக்கம்

புதன், 28 ஜூன் 2017 (07:03 IST)
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக தங்களுடைய சம்பளத்தை நன்கொடையாக விஷால் மற்றும் கார்த்தி கொடுப்பதாக கூறி நடிக்கவுள்ள திரைப்படம் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா'



 


பிரபுதேவா இயக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக 'வனமகன்' புகழ் சாயிஷா நடிக்கவுள்ளார். விஷாலுக்கு இந்த படத்தில் ஜோடி இல்லை.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 3 முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காமெடி மற்றும் ஆக்சன் படமான இந்த படம் மூன்றே மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்