தங்கர்பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (18:31 IST)
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவான களவாடிய பொழுதுகள் என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 6 ஆண்டுகள் கழித்து தங்கர்பச்சான் இயக்கி உள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்தவித ‘கட்’டும் செய்யாமல் யூ சான்றிதழ் அளித்துள்ளனர். 
 
மேலும் இந்த படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு,  மஹானா, சஞ்சீவி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், பிரமிட் நடராஜன், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பி.லெனின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்