100 கோடி வசூல் க்ளப்பில் இணைந்த கார்த்திகேயா 2!

சனி, 27 ஆகஸ்ட் 2022 (09:16 IST)
தெலுங்கு சினிமாவில் வரிசையாக படங்கள் தோல்வி அடைந்து வந்த நிலையில் அந்த திரையுலகுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கார்த்திகேயா 2 வெற்றி பெற்றுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நிகில் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘கார்த்திகேயா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் இந்த படம் ரிலீசானது.

இந்த படம் தெலுங்கு சினிமாவில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஹிட் படமாக அமைந்து வசூலில் கலக்கியது. இந்த படம் இந்தியிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தி படங்களே அங்கு வெற்றி பெற முடியாமல் தடுமாறி வரும் நிலையில் கார்த்திகேயா 2 கலக்கி வருகிறது. முதலில் குறைவான திரைகளில் ரிலீஸான இந்த திரைப்படம் தற்போது அதிக எண்ணிக்கையில் திரையிடப்படுகிறது.

இந்நிலையில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இந்த படம் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்