நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஜீவா பட நடிகை!

புதன், 21 ஜூலை 2021 (15:37 IST)
நடிகை கார்த்திகா தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா ஆகியவர்கள் 1980 களில் பிரபல கதாநாயகிகளாக வலம் வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு சினிமாவை விட்டு விலகினர். இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு ராதாவின் மகளான கார்த்திகா கோ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர் அன்னக்கொடி மற்றும் புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்தாலும் அவருக்கென்று பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இப்போது அவரின் அம்மா ராதாவின் ஹோட்டல்களை கவனித்துக்கொண்டு வருகிறாராம்.

ஆனாலும் சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்புகளையும் தேடி வருகிறார். அந்த வகையில் இப்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்