மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அவர் அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக மம்மூட்டி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தமிழ் தலைப்பாக நண்பகல் நேரத்து மயக்கம் என வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு பழனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.
மலையாளத்தில் ஜனவரி 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம், தமிழில் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டியுள்ளார். அவரின் ட்வீட்டில் “ மிகவும் அழகான மற்றும் புத்துணர்ச்சியான படம், மம்மூட்டி சார் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லிஜோ ஜோஸின் இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்காமல் மிஸ் செய்து விடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.