தடாலடியாக விஷால் சம்பளத்தைக் குறைத்த கார்த்திக் சுப்பராஜ்...!

புதன், 26 ஏப்ரல் 2023 (08:38 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஹரி என்பதும் இவர் சமீபத்தில் அருண் விஜய் நடித்த யானை என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கினார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக விஷால் மற்றும் ஹரி ஆகிய இருவருக்குமே தாங்கள் இதுவரை வாங்கி வந்த சம்பளத்தில் பெரும்பகுதி குறைக்கப்பட்டுள்ளதாம். விஷாலுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமாகவும், இயக்குனர் ஹரிக்கு 1.5 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகவும் தரப்படும், என கார்த்திக் சுப்பராஜ் கண்டிப்புடன் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. விஷால் மற்றும் ஹரி ஆகிய இருவருக்குமே இப்போது மார்க்கெட் இல்லை என்பதால், அவர்களும் இந்த சம்பளத்துக்கு ஒத்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்