அவர் கடின உழைப்பாளி… ஜகமே தந்திரம் பட நடிகரைப் புகழ்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

வெள்ளி, 4 ஜூன் 2021 (11:46 IST)
ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மிகச் சிறந்த உழைப்பாளி என கார்த்திக் சுப்பராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகிய படமாக ஜகமே தந்திரம் அமைந்துள்ளது.

இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ள கார்த்திக் சுப்பராஜ் ஜோஜு ஜார்ஜை புகழ்ந்து பேசியுள்ளார். அதில் ‘ஜோஜு ஜார்ஜ்தான் இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தினார். அவரின் ஜோசப் படம் பார்த்த பின்னரே நாங்கள் தேர்வு செய்தோம். விஜய் சேதுபதி போல ஜோஜு கடுமையான உழைப்பாளி. பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளார். இந்த படம் வந்த பின்னர் அவர் பெரிய அளவில் பேசப்படுவார்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்