விஜயகாந்த் - ஸ்டாலின் சந்திப்பு - அதிமுக அதிர்ச்சி ...

வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (13:21 IST)
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில், ரஜினிகாந்த் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துள்ளார். இதனையடுத்து இன்று விஜயகாந்தை சந்திப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலினும் சென்றுள்ள சம்பவம் அரசியலில் வானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துவிட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேமுதிகவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின், விஜய காந்தை சந்திக்க சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்துக்கு சென்றுள்ளார். அநேகமாக அரசியல் நிமித்தமாக சந்திப்பாகத்தான் இது  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
ஏற்கனவே முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சில விஜயகாந்தை சந்துத்துள்ளது கூட்டணி குறித்து பேசத்தான் என்று தற்போது தகவல் வெளியாகிறது.
 
அதிமுக- பாஜக வுடனான கூட்டணி இழுபறியில் உள்ள நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுக விரும்புகிறதோ என கேள்வி எழும்புகிறது.
 
அதிமுக மெகா  கூட்டணி வைத்துள்ள நிலையில்,  தற்போது திமுகவும்  மெகா, மெகா கூட்டணி வைக்க அரசியல் காய் நகர்த்தி வருகிறது எனத்தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்