இமயமலையில் கார்த்தியின் புதிய படம்

சனி, 3 மார்ச் 2018 (09:50 IST)
கார்த்தி நடித்த 'தீரம் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் 'தீரம் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பின் மீண்டும் ரகுல் ப்ரித்திசிங் ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா உள்பட பலர் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்த நவரச நாயகன் கார்த்திக் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கவுள்ளார். எங்கேயும் எப்போதும்" இயக்குநர் சரவணன் ,  மற்றும் இயக்குனர்  R.கண்ணன் ஆகியோர்களிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இமயமலை அருகே நடைபெறவுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்