முத்து இருளாண்டியின் மற்றும் சகுனி கார்த்திக் இருவரையும் போலீசார் ஆஜராக கூறியதாகவும், அதன்பேரில் இருவரையும் அழைத்த வந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு போலீசார் கொன்றுவிட்டதாகவும் சகோதரி சித்திரைச்செல்வி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடந்தபின் இருவரது குடும்பத்தினருக்கு போலீசார் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களை கூட பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச்செல்வி கூறியுள்ளார். இந்த பேட்டி தமிழகத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.