பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன்…!

திங்கள், 18 அக்டோபர் 2021 (10:10 IST)
பெங்களூரில் நடக்க உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படம் கலந்துகொள்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் கர்ணன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே திரையரங்கில் வெளியாகி விமர்சம் மற்றும் நல்ல வசூலை பெற்ற இப்படம் சில வாரங்களில் ஓடிடியிலும் வெளியானது.

கடந்த மாதம் கர்ணன் திரைப்படம் ஜெர்மனியில் ஃபார்ங்பர்ட் நகரில் நடைபெறும் புதிய தலைமுறை இந்திய படங்களுக்கான திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்போது பெங்களூருவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்