தனுஷ் வேற லெவல் நடிகர்: பிரபல பாலிவுட் நடிகை பாராட்டு

புதன், 3 ஆகஸ்ட் 2022 (13:44 IST)
நடிகர் தனுஷின் நடிப்பை கோலிவுட் திரையுலகினர் பலர் பாராட்டி இருக்கும் நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகில் நடிகை கரீனா கபூர் தனுஷ் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
 
பாலிவுட் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ் வேற லெவல் நடிகர் என்றும், அவர் எந்த கேரக்டரில் நடித்தாலும் அந்த கேரக்டராகவே மாறி விடுவார் என்றும் அவரிடம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான நடிப்பை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் அளித்த இந்த பேட்டியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்