இது சமம்ந்தமாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் “நான் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு தினமும் 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப் படுகிறது. அதனால் நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன். நான் கராத்தே சொல்லிக் கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று இருக்கிறேன். அங்குதான் நடிகர் பவண் கல்யாண் வந்து கராத்தேக் கற்றுக்கொண்டார். அந்த இடத்தை அவர் வாங்கிக் கொள்ள வேண்டும். அதே போல விஜய்க்கு ஒரு கோரிக்கை. அவர் தமிழ்நாடு முழுவதும் குடும்பத்துக்கு ஒரு வில்வித்தை வீரர் மற்றும் வீராங்கனையை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.