தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த இயக்குனராகவும், தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்றும் அழைக்கப்படும் இயக்குனர் கே.பாலசந்தரின் 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் கமல் – ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு முத்திரை படங்களை அளித்த பாலசந்தரின் பிறந்தநாளில் பலரும் அவரை நினைவுக் கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் “சினிமாவின் அத்தனை வகைமைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் என் வாத்யார் கேபி. என்னுடைய 16-வது வயதில் அவருடனான அறிமுகம் ஏற்பட்டது. எங்கள் குரு சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு. அமரர் கே.பாலச்சந்தர் அவர்களை அவரது 91-வது பிறந்தாளில் நினைவுகூர்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.