மின்னல் வேகத்தில் செல்லும் மணிரத்னம்… தக் லஃப் ஷூட்டிங் இத்தனை சதவீதம் முடிந்துவிட்டதா?

vinoth

ஞாயிறு, 9 ஜூன் 2024 (10:28 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை ஒரு பார் செட் அமைக்கப்பட்டு அங்கு ஒரு ஆக்‌ஷன் காட்சியும் பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த கட்ட ஷூட்டிக்காக படக்குழு கேரளா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை நடந்த ஷூட்டிங்கில் 70 சதவீதம் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் 40 நாட்களில் மொத்தப் படமும் முடிந்துவிடும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் தக்லைஃப் திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்