நேரம், பிரேமம் மற்றும் கோல்ட் ஆகிய படங்களுக்கு அடுத்து அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இயக்குனர் அல்போன்ஸுக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக அவரே அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பாடலை உருவாக்கிய அல்போன்ஸ், அதை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் மூலமாக கமல்ஹாசனிடம் சேர்த்திருந்தார்.
அதையடுத்து கமல்ஹாசன் ஆடியோ மெஸேஜ் ஒன்றை அல்போன்ஸ் புத்ரனுக்கு அனுப்பியுள்ளார். அதை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில் “வணக்கம். அல்போன்ஸ் புத்ரனின் பாட்டு கேட்டேன். அவருக்கு உடம்பு சுகமில்லை என்று சொன்னீங்க. ஆனால் மனசு நல்லா இருக்கு. சந்தோஷமாக இருக்கட்டும். வாழ்த்துக்கள். உடம்ப நல்லா பாத்துக்க சொல்லுங்க.. டேக் கேர் அல்போன்ஸ்” எனக் கூறியுள்ளார்.