சார்பட்டா படக்குழுவினரை அழைத்துப் பாராட்டிய கமல்!

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:10 IST)
சார்பட்டா பரம்பரை படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. 1970ளில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சன அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அப்போதைய எமெர்ஜென்சி கால சூழல் போன்றவற்றை பதிவு செய்திருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பலதரப்புகளில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான கமல்ஹாசன் சார்பட்டா படத்தின் குழுவினரை அழைத்துப் பாராட்டியுள்ளார். விக்ரம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இயக்குனர் ரஞ்சித், ஆர்யா, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் ப்ரபா ஆகியோர் கமலை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்