கமல் மணிரத்னம் படத்தில் இணையும் பிரபல நடிகை?

சனி, 4 நவம்பர் 2023 (07:57 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படத்தின் பூஜை மற்றும் ப்ரமோஷன் வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்த நிலையில் அடுத்த ஆண்டு ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்த படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் திரிஷா ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிகை அபிராமி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே கமலுடன் விருமாண்டி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்