இந்தியன் 2 ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறதா? லேட்டஸ்ட் தகவல்!

vinoth

வியாழன், 2 மே 2024 (08:43 IST)
கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல பிரச்சனைகளைக் கடந்து இப்போதுதான் ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மே மாதமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இப்போது ஆடியோ வெளியீட்டு நிகழ்சி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தின் ரிலீஸ் தேதியே தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் இன்னும் சில பணிகள் முடியாமல் இருப்பதால் இந்த தாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்