கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள்!

vinoth

புதன், 1 மே 2024 (07:41 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கொடுத்த தேதியில் தக்லைஃப் படக்குழுவினரால் அவர்களை வைத்து ஷூட்டிங் எடுக்க முடியாததால் அவர்கள் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்து வரும் நிலையில் படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர்களான பங்கஜ் திரிபாது மற்றும் அலி பாஸில் ஆகியோர் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்