கமலா சுரையா வேடம்... வித்யா பாலனுக்கு பதில் மஞ்சு வாரியர்

புதன், 15 பிப்ரவரி 2017 (16:04 IST)
மலையாளத்தின் மிகச்சிறந்த எழுத்தாளரும் கவியுமான மறைந்த கமலா சுரையா என்ற மாதவிக்குட்டியின் வாழ்க்கை  வரலாறை இயக்குனர் கமல் படமாக எடுக்கிறார்.

 
ஆமி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் கமலா சுரையாவாக நடிக்க வித்யா பாலனிடம் கேட்டிருந்தனர். படத்தின்  கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்தும் வித்யா பாலன் படத்தில் நடிக்கவில்லை.
 
தற்போது அவருக்குப் பதில் மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளார். கமலா சுரையாவாக மஞ்சு வாரியர்தான் நடிக்க உள்ளார்.  விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்