மழைநீரில் நடந்த போது தொற்றாத கொரோனா விமான நிலையத்தில் தொற்றியது… கமல் பேச்சு!

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (11:35 IST)
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கமல் வீடு திரும்பியுள்ளார். அவர் அமெரிக்கா சென்று வந்த நிலையில் அவருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஆடியோ ரிலிஸில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது தனக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது குறித்து பேசிய அவர் ‘குப்பங்களிலும் மழைநீரிலும் நடந்தபோது தொற்றாத கொரோனா அமெரிக்கா விமான நிலையத்தில் என்னை தொற்றிவிட்டது.’ எனக் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்