இவர் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி தனது இன்ஸ்டாகிராமில், "என்னை பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க என்னை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி...!! உங்கள் வாக்குகளால் நீங்கள் அனைவரும் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்... இந்த நாட்களில் உங்களது எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் மன்னிக்கவும்... இந்த நிமிடம் முதல் என்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் உங்களை மகிழ்விப்பேன்..! என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர் ஒருவர், வணக்கம் ஜனனி, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆகி நாடு திரும்ப வேண்டும் என எதிர்பார்த்தேன் இருப்பினும் இவ்வளவு நாட்கள் BigBoss வீட்டில் இருந்ததே வெற்றி தான். எதிர்கால வாய்ப்புக்களை சிறப்பாக பயன்படுத்தி வாழ்க்கையிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.