அமைதி வழி தீர்வு காண்போம்: சீனாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை

செவ்வாய், 16 ஜூன் 2020 (19:09 IST)
நேற்று இரவு இந்திய சீன எல்லையில் சீன ராணுவம் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 இந்திய ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த 2 இந்திய ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவர் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி தமிழகத்தையே சோகக் கடலில் ஆழ்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சீன எல்லையில் வீரமரணமடைந்த பழனி அவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் பழனி அவர்களின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிதி உதவியும், அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் பழனி மறைவு குறித்து பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது
 
எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்