கமலின் இரண்டாம் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த சிவாஜி - பழைய புகைப்படம் வைரல்!

வெள்ளி, 19 மே 2023 (12:52 IST)
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி அறிமுகமாகி பின்னாளில் நட்சத்திர ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் கமல் ஹாசன். இவர் பிராமணர் குடும்பத்தில் பிறந்து திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த முதல் படத்திலே தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். 
 
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பத்ம பூசண், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவர் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர், திரைக்கதைபின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார். 
 
இவர்  1978⁠ம் ஆண்டு வாணி கணபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு அவரை 1985ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர்  1988ம் ஆண்டு சரிகா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் முன் நின்று நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதி ஹாசன் , அக்ஷரா ஹாசன். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்