‘அந்த’ ஐபிஎல் அணிக்காக ரெடியான கேஜிஎஃப் 2 சிறப்புக் காட்சி… வைரல் pics!

திங்கள், 18 ஏப்ரல் 2022 (10:10 IST)
சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டாகியுள்ள கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒரு ஐபிஎல் அணிக்கு திரையிடப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான பிரபல கன்னட நடிகர் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.550  கோடி வசூல் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் மக்கள் தங்கள் சொந்த மொழிப் படம் போல இதைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பல் பிலிம்ஸ் தற்போது பயோ பபுளில் இருக்கும் RCB அணிக்கு இந்த படத்தை படத்தினை சிறப்பு திரையிடல் மூலம் திரையிட்டுக் காட்டியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்