முதல் முறையாக கமல் படத்தில் யோகி பாபு?

சனி, 1 ஜூலை 2023 (08:28 IST)
நடிகர் கமல்ஹாசன் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அவர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை விரைவில் முடிக்க உள்ள கமல் அடுத்து பிராஜக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை முடித்ததும் கமல்- அ. வினோத் திரைப்படம் தொடங்க உள்ளது. இந்த படம் பற்றி பல்வேறு அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. அந்த வரிசையில் இப்போது இந்த படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே விஜய் சேதுபதியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக உள்ளது. கமல் மொத்தமே 45 நாட்கள்தான் இந்த படத்துக்காக தேதிகள் ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்