ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை!

திங்கள், 21 நவம்பர் 2022 (07:25 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது
 
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேற்கண்ட 6 மாவட்டத்தில் உள்ள நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எண்ணூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்