கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் படம் 1995 ஆம் ஆண்டு தொடங்க பட்டு பட்ஜெட் காரணமாக பாதியிலேயே நிறுத்தப் பட்டது. மருதநாயகம் கமலின் கனவுப் படங்களில் ஒன்று. இந்த படத்துக்காக இங்கிலாந்து மகாராணியை எல்லாம் வரவைத்து படபூஜை நிகழ்த்தினார் கமல். 30 நிமிடங்கள் வரை ஓடும் காட்சிகளையும் எடுத்து முடித்து ஒரு பாடலையும் ரிலீஸ் செய்தார். ஆனால் அதன் பின் பொருளாதார காரணங்களால் இந்த படம் நிறுத்தப்பட்டது.
படத்தில் கமல்ஹாசனை மலைமேல் காலில் அம்பு குத்தி காயம்பட்டு கிடக்கும் போது அதை கழுகு ஒன்று கொத்துவது போல ஒரு காட்சி இருக்கும். அதை கிராபிக்ஸில் செய்ய முடியாது என்பதால், அதற்காக வெளிநாட்டில் இருந்து கழுகு ஒன்றை வரவழைத்து, ஒருமாதம் அதற்கு பயிற்சி கொடுத்து அந்த காட்சியை படமாக்கினாராம் கமல்ஹாசன்.