பிறந்தநாளில் கமல் அறிவிக்கப்போகும் சர்ப்ரைஸ் அறிவிப்புகள்!

சனி, 6 நவம்பர் 2021 (17:50 IST)
நடிகர் கமல்ஹாசனின் 67 ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

நடிகராக இருந்த கமல்ஹாசன் இப்போது அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அந்த குறையைப் போக்கும் விதமாக இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் மும்முரமாக நடந்துவருகிறது.

இந்நிலையில் நாளை கமல்ஹாசனின் 67 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் விக்ரம் படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியாக உள்ளது. மேலும் தன்னுடைய பிறந்தநாளில் நெருங்கிய நண்பர்களுக்கு விருந்தளிக்க உள்ள கமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட உள்ளாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்