இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக கார்த்தி 29 எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்த படத்தின் ஷூட்டிங் மே அல்லது ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. தற்போது முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் தமிழில் ஏற்கனவே சிவகார்த்திகேயனோடு ஹீரோ மற்றும் சிம்புவோடு மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.