கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தாணு… வெளியானது ப்ரோமோ!

திங்கள், 3 ஜூலை 2023 (07:44 IST)
தயாரிப்பாளர் தாணு தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை தயாரிக்கிறார். கிச்சா சுதீப்பின் 46 ஆவது படமாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ தற்போது வெளியாகி கவனத்தில் ஈர்த்துள்ளது.

இந்த படத்தை விஜய் கார்த்திகேயா இயக்க, காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். தாணு விரைவில் சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்