ஓடிடி தொடங்குகிறதா கலைஞர் தொலைக்காட்சி?

திங்கள், 4 அக்டோபர் 2021 (16:00 IST)
கலைஞர் தொலைக்காட்சி விரைவில் ஒரு ஓடிடி தளத்தை ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக ஓடிடிக்களின் பெருக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி போல உலகளாவிய ஓடிடி தளங்களுக்கு மத்தியில் இப்போது பிராந்திய ஓடிடிகளின் வரவும் அதிகமாகி வருகின்றன.

இந்நிலையில் தமிழில் சன், ஜி தொலைக்காட்சிகள் தங்களுக்காக தனியான ஓடிடி வைத்திருப்பது போல கலைஞர் தொலைக்காட்சியும் விரைவில் ஓடிடி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அதிகளவில் திரைப்படங்களையும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்