கைதி ரீமேக் போலாவின் மாஸ் மசாலா ட்ரைலர்… தமிழ் ரசிகர்களுக்கு திருப்தி அளித்ததா?

செவ்வாய், 7 மார்ச் 2023 (08:11 IST)
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு அதன் திரைக்கதை மற்றும் நாயகியே இல்லாமல் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் மற்றும் பாடல்கள் இல்லாத படம் ஆகியவையே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது உருவாகி வரும் நிலையில் கார்த்தி வேடத்தில் நடித்து வரும் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார. அதுமட்டும் இன்றி இந்த படத்தில் ஒரு ஐட்டம் சாங் இருப்பதாகவும் அந்த பாடலுக்கு ராய் லட்சுமி நடனமாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அம்சம் கொண்ட ஒரு படத்தை ஐட்டம் சாங் மற்றும் நாயகி என சொதப்பி வருவதாக பாலிவுட் திரை உலவினர்களுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று போலா படத்தின் டிரைலர் வெளியானது. படத்தில் ஐட்டம் பாடல், டூயட் என எல்லாம் கலந்து கைதி படத்தில் பல மாற்றங்களை செய்துள்ளனர் பாலிவுட் குழுவினர். ராவான கைதி படத்தை ரசித்த தமிழ் ரசிகர்களுக்கு இந்த டிரைலர் திருப்தியை அளிக்கவில்லை என்றே பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்