கடுகு தயாரிப்பாளரை மகிழ்வித்த தமிழக அரசு

சனி, 25 மார்ச் 2017 (05:33 IST)
இயக்குனர் விஜய்மில்டன் இயக்கத்தில் நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் ஹீரோவாக நடித்த 'கடுகு' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பரத் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தின் முதல் நாள் வசூல் திருப்திகரமாக உள்ளதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி வருகின்றது



 


இந்த நிலையில் இந்த படத்திற்கு 30% வரிவிலக்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த செய்தி தயாரிப்பாளருக்கு மட்டுமின்றி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

ஒரு சிறிய பட்ஜெட் படம், அதுவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படத்திற்கு வரிவிலக்கு கிடைத்திருப்பது அனைத்து தரப்பினர்களின் லாபத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்