கடவுள் இருக்கான் குமாரு... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல

புதன், 17 ஆகஸ்ட் 2016 (15:11 IST)
ராஜேஷ் படம் எடுத்தால் டைட்டில் தொடங்கி சுபம்வரை கான்ட்ரவர்சிதான். பெரும்பாலும் அது டாஸ்மாக்கை சுற்றியதாக இருக்கும். இந்தமுறை... அதுக்கும் மேலே.


 
 
ராஜேஷ் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துவரும் படத்துக்கு கடவுள் இருக்கான் குமாரு என்று பெயர் வைத்து, பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். ஏ நாயே இங்கே சிறுநீர் கழிக்காதே என்று எழுதப்பட்டுள்ள சுவரில் ஆர்.ஜே.பாலாஜியும், ஜீவி.பிரகாஷும் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து சிறுநீர் கழிக்க நிற்பது போல் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நம்ம படம்டா என்று இளசுகள் எகிறி குதிக்க இது ஒண்ணு போதும்.
 
இயற்கை உபாதைக்கு கழிப்பறையைதான் பயன்படுத்த வேண்டும் என்று இந்தியா முழுவதும் பணத்தை இறைத்து பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் என்னடாவென்றால், பர்ஸ்ட் லுக்கில் ஜிப்பை அவிழ்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
 
குமாரு... கடவுள் இருந்தா உனக்கு சவுக்கடி கன்பார்ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்