கபாலியை திரையிட கர்நாடக வர்த்தக சபை எதிர்ப்பு

வியாழன், 21 ஜூலை 2016 (10:10 IST)
கபாலி திரைப்படத்தை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் பெங்களூருவில் உள்ள நான்கு நட்சத்திர விடுதிகளில் நாளைக்கு நான்கு காட்சிகள்வீதம் திரையிடுவதாக இருந்தனர்.


 


ஒரு டிக்கெட் 1300 ரூபாய். இதற்கு கர்நாடக வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
திரைப்படங்களை திரையரங்குகளில்தான் திரையிட வேண்டும். ஹோட்டல்களில் திரையிடுவது என்றால் மின்சாரவாரியம், தீயணைப்புதுறை, பொதுப்பணித்துறை, மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் இந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. அதனால், கபாலி திரையிடுவதை தடுக்க வேண்டும் என்று கர்நாடக வர்த்தக சபை கூறியுள்ளது. 
 
மேலும், இது குறித்து கர்நாடக அரசின் உள்துறை செயலருக்கும், பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்