’காத்துவாக்குல ரெண்டு காதல்’ டீசர் தேதி அறிவிப்பு!

புதன், 2 பிப்ரவரி 2022 (14:49 IST)
அஜித்தின் வலிமை உள்பட பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’  படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி மற்றும் திரைப்பட ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது
 
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீஸர் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் திரையரங்குகளில் மட்டுமே இந்த படம் வெளியாகும் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.  இதனை அடுத்து  இந்த படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
மேலும் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி உள்ளது தெரிந்ததே.  விஜய்சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்