காலா ரஜினி வசனங்களை அவரது வாழ்வுடன் தொடர்புபடுத்த முடியாது: லதா ரஜினிகாந்த்
வியாழன், 7 ஜூன் 2018 (20:12 IST)
காலா படத்தில் ரஜினி பேசிய வசனங்களை அவரது வாழ்வுடன் தொடர்புபடுத்த முடியாது என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தின் டிரைலர் வெளியானபோது அதில் ரஜினி பேசிய வசனங்கள் மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்ப்வத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ரஜினி பார்வையிட்டார். அப்போது அவர் போராட்டத்திற்கு எதிரான தனது கருத்தை தெரிவித்தார்.
இதனால் பலரும் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். போராட்டம் தொடர்பாக ரஜினி படத்தில் பேசுய வசனத்தையும், நிஜத்தில் பேசிய வசனத்தையும் பிரித்து சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் காலா படம் பார்த்த பிரகு கூறியதாவது:-
காலா ரஜினிகாந்த் படத்திற்கான கதாபாத்திரம் மட்டுமே. அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்களை ரஜினிகாந்தின் வாழ்வுடன் தொடர்புபடுத்த முடியாது. இந்த படத்திற்கு கொடுத்த வரவேற்புக்கு நன்றி என்று கூறினார்.