பாகுபலி ஹீரோவுக்கு அக்காவான ஜோதிகா

வெள்ளி, 21 மே 2021 (21:16 IST)
முன்னணி நடிகரின் படத்தில் அவருக்கு அக்காவாக நடிகை ஜோதியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் பாகுபலி. இதில் இன்றைய முன்னணி நடிகர்களான பிரபாஸ் மற்றும், ராணா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தனர். அவர்களுடன் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்தனர்.

இப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. இந்தியாவின் இதுவரை எந்தப் படமும் காணாத வசூலைப் பெற்றது.

இப்படத்திற்குப் பிறகு பிரபாஸும், ராணாவும் இணைந்து நடிக்கவில்லை. பிரபாஸ் இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக அறியப்படுகிறார். ராணாவும் தென்னிந்திய சினிமாவில் ஒரு வலம் வருகிறார்.

இந்நிலையில்,கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ’’சலார் ’’என்ற படத்தை அவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது.

இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக ராணா நடிக்கவுள்ளராம்.  மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் அவருடம் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
 

சலார் படத்தின் ஹூட்டிங் அடுத்தமாதம் ஆரம்பவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரபாஸிக்கு அக்காவாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கார்த்தி நடித்த தம்பி படத்தி அவருக்கு அக்காவாக நடித்த ஜோதியாக தற்போது பிரபாஸுக்கு அக்காவாக நடிப்பில் அசத்துவார் என கூறப்படுகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்