அமேசான் ப்ரைமிற்கு விற்கப்பட்ட ஜோதிகா படம்? சூர்யாவுக்கு டபுள் லாபம்!!

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (10:33 IST)
பொன்மகள் வந்தால் திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக அமேசான் ப்ரைமில் விற்கப்பட்டுவிட்டதாக தகவல். 
 
அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம் பொன்மகள் வந்தால். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
96 பட புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து இந்ர்த படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை. 
 
இந்நிலையில், இந்த படத்தை சூர்யா திரையரங்கிற்கு கொண்டு வரமால் நேரடியாக டிஜிட்டல் மார்க்கெட்டில் இரு மடங்கு லாபத்திற்கு விற்றுள்ளார். ஆம், அமேசான் ப்ரைம் இந்த படத்தை 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்