இந்நிலையில் முதல் பாகத்தில் கணவன் மனைவியாக நடித்த கமல் மற்றும் கௌதமி ஆகியோர் சொந்த பிரச்சனைக் காரணமாக இப்போது பிரிந்துள்ளனர். கமல் மீது கௌதமி தொடர்ந்து விமர்சனங்களை வைத்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் பாபநாசம் 2 படத்தில் கௌதமிக்கு பதில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜோதிகா கமலோடு தெனாலி மற்றும் வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.