ஜுன் 9 ரெமோ பர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக்

செவ்வாய், 10 மே 2016 (13:28 IST)
சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ்; கண்ணன் இயக்கத்தில் ரெமோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வருகிறது. 


 
 
மிகுந்த பொருட் செலவில் தயாராகும் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக்கை ஜுன் மாதம் 9 -ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
ரெமோவில் சிவகார்த்திகேயன் பல கெட்டப்புகளில் நடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, வெளிநாட்டு ஒப்பனை கலைஞர்கள் படத்தில் பணியாற்றி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்