இன்றைய நிகழ்ச்சியில் ஓவியாவை தூங்க விடாமல் ஜூலி, காயத்ரி மற்றும் நமீதா ஆகியோர் பாட்டு பாடி கடுப்பேற்றி வந்தனர். 'என்னம்மா கண்ணு செளக்கியமா? என்ற பாடலையும், திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்றும் ஜூலி தனது கொடூரமான குரலில் பாடினார்.
இதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத ஓவியா, அறையில் இருந்து வெளியேறி ஆண்களின் படுக்கையறைக்குள் சென்று படுத்து கொண்டார். ரூம் போட்டு யோசித்தாலும் ஓவியாவை விரட்ட முடியாது போல தெரிகிறது. இதற்கெல்லாம் நாளை கமல்ஹாசனுக்கு இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.